போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) கூறுவதை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை உலக தலைவர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) விடுத்துள்ளார்.
சமாதான பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் நிச்சயமாக பங்கேற்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), விளாடிமிர் புடினுடன் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை கலந்துரையாடினார்.
இதனையடுத்து, போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நல்ல வாய்ப்பு இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.