இதுவரை 75 ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் ஊழல், மோசடி, இலஞ்சம்,
வீண்விரயம், திருட்டு, கொள்ளை என பலவித்த்தில் கொடிகட்டி பறந்திருந்தார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்
அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.
நேற்று (26.12.2024) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வங்குரோத்து நிலை
மேலும் தெரிவிக்கையில், அண்மையில் தற்போதைய அரசாங்கம் சில கருத்துக்களை வெளியிட்டுக்
கொண்டிருக்கின்றது.
உண்மையில் ஏழை எளியவர்களுக்காக, அல்லது வருமானம் குறைந்த
மக்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தில் இருந்த நிதி வழங்கப்பட வேண்டும்.
ஆனால்
சுகாதார அமைச்சராக இருந்தவர்கள், அரசியலில் பிரமுகர்களாக இருந்தவர்கள்,
பிரதானிகளாக இருந்தவர்கள், செல்வந்தர்களாக இருந்தவர்கள், தமது
சிகிச்சைகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றிருக்கின்றார்கள்.
இந்த ஊழல்
மோசடிகள் தான் நாட்டில் வங்குரோத்து நிலை ஏற்படுவதற்கு காரணமாக
இருந்திருக்கின்றன. இவை பெரும் சான்றாக அமைந்துள்ளன.
ஒரே தடவையாக ஒழிப்பது
இந்த ஊழல் மோசடிகள் என்பதை ஒரே தடவையாக ஒழிப்பது என்பதும் முடிவுறுத்துவது
என்பதும் கடினமான காரியம்.
அந்த காரியத்தை தர்க்க ரீதியாக செய்வதென்பது
தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர் விரும்பி கொண்டிருக்கின்றார்கள்.
அது
நடைபெற்றால் இந்த நாட்டில் நடைபெறுகின்ற கொள்ளைகள், திருட்டுக்கள், வீண்
விரயங்கள், ஊழல் மோசடிகளை முடிவுக்கு கொண்டு வந்து ஏழை மக்களுக்கு சாதாரண
மக்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் மானியங்கள் கிடைப்பதற்கு
வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.