முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு: எழுந்துள்ள குற்றச்சாட்டு

Courtesy: Sivaa Mayuri

புதிய இணைப்பு

சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலை சுமார் 200 ரூபாயால் திடீரென அதிகரித்துள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தமது இருப்புக்களை பதுக்கியுள்ளதன் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தி வருவதாக குற்றம் சுமத்தியுள்ள சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா, தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்று 1000 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Price Of Coconut Oil

அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை அவர் விமர்சித்த அவர், இன்று வரையில் நிதியமைச்சு தேங்காய் எண்ணெய்க்கு வரி விதிக்கவில்லை, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவில்லை, தென்னை அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீடும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், தேங்காய் எண்ணெய் விலையை குறைக்க உதவும் வகையில் உள்ளூர் கைத்தொழில்துறையினருக்கு அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று புத்திக டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

முதலாம் இணைப்பு

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக  தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) இன்று தெரிவித்துள்ளது.

இதன்படி ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180 ரூபா தொடக்கம், 200 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யின் தற்போதைய சில்லறை விலை 550  ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

பதுக்கி வைக்கப்பட்டுள்ள, தேங்காய் எண்ணெய்

இந்தநிலையில், சுங்கத் திணைக்களம் தமது வரிகளை 150 ரூபாயால் அதிகரித்ததா? என அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Price Of Coconut Oil

அத்துடன் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, தேங்காய் எண்ணெய் கையிருப்புகளை கண்டுபிடிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.