முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பாறையில் அதிபரின் வெறித்தனமான செயல் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

அம்பாறையில் (Ampara) மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய
குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல
அம்பாறை நீதிமன்ற நீதிவான், குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அம்பாறை நகர பாடசாலையில் கடந்த மே 16 ஆந் திகதி ஐந்தாம் தர 11 மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை அதிபர் தங்களது பிள்ளைகளை தாக்கியதாக குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தனர்.

தாக்குதல்கள் 

இதற்கமைய அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும்
அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகியோர் குறித்த மாணவர்கள்
மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மெற்கொண்டனர்.

அம்பாறையில் அதிபரின் வெறித்தனமான செயல் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Principal Brutally Attacks School Students

இதனடிப்படையில், தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதான வைத்திய அறிக்கைகள் பெறப்பட்ட நிலையில் மாணவர்களை தாக்கிய சந்தேக நபரான அதிபர் மகளிர் காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் குறித்து அம்பாறை சிறுவர் மறுவாழ்வு மையம்
செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கல்வித் துறையும் காவல்துறையும்
விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சந்தேக நபரை அம்பாறை சிறுவர்
மற்றும் மகளிர் பணியக பிரதம பொறுப்பதிகாரி தயானி கமகே கைது செய்தார்.

மேலதிக விசாரணை

இதன்பின்,
அம்பாறை நீதிமன்ற நீதவான் நவோமி விக்ரமரத்ன முன்னிலையில் சந்தேக நபர்
முன்னிலைப்படுத்தப்பட்ட பின் தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு
சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.

அம்பாறையில் அதிபரின் வெறித்தனமான செயல் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு | Principal Brutally Attacks School Students

அத்தோடு, மறு விசாரணை எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அத்தோடு, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை
அத்தியட்சகர் சனத் அமரசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் அம்பாறை சிறுவர்
மற்றும் மகளிர் பணியக பிரதம பொறுப்பதிகாரி தயானி கமகே உள்ளிட்ட அதிகாரிகள்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.