அண்மைக்காலங்களில் கைதிகள் மரணம் தொடர்பில் பரவலாக பேசப்பட்ட மஹர சிறையில் சில நாட்களுக்கு முன்னர்
உயிரிழந்த கைதி ஒருவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது தாயாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடும் பிரபல அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மரணம் தாக்குதலால் மேற்கொள்ளப்பட்ட கொலையா? என சந்தேகிக்கும் கைதிகளின்
உரிமைகளுக்கான பாதுகாப்புக் குழு, இதன் அடிப்படையில் மரணமடைந்த நபரின் சடலத்தை அவரது தாயாரிடம் உறுதிப்படுத்துவது தொடர்பில் காண்பிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது.
அவரது தாயாரும் தற்பொது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறைத்துறை நடவடிக்கை
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த அமைப்பின் தலைவர் சுதேஷ் நந்திமால் சில்வா, ,
“உயிரிழந்தவரின் வீட்டில் யாரும் இல்லை. ஏனெனில் அந்த
இறந்தவரின் தாய் தற்போது சிறையில் உள்ளார். ஆனால் சிறைத்துறை இது தொடர்பாக
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், அந்த தாயை பிரேத பரிசோதனையின்போது முன்னிலைப்படுத்தவோ இறந்த உடலை அடையாளம் காணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அண்மையில் சிறையில் அடைக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேகத்தின்
பேரில் சிறைக்குக் கொண்டுவரப்பட்டவரே தற்போது உயிரிழந்துள்ளார். அவருடன் இரண்டு கைதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு கைதியின் கால் முறிந்துள்ளதாக இப்போது
சிறைச்சாலை சொல்கிறது.
தப்பிக்க முயற்சி
இருவரும் தப்பிக்க முயன்றனர் என்றும், தப்பிக்க முயற்சிக்கையில், அவர்களில் ஒருவர் கீழே விழுந்ததால் கால் முறிந்துள்ளது என சிறைச்சாலை சொல்கிறது. மற்றவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாம்.
அப்படியானால், இதன் பின்னணியில் எமக்கு பாரிய சந்தேகம் உள்ளது. இந்த கைதிகள்
இருவரையும் அடித்து ஒருவரின் காலை உடைத்துவிட்டு, மற்றையவர் இங்கு அடித்துக்
கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.
ஏனெனில் மஹர சிறையில் முன்னுதாரணங்கள் உள்ளன. எனவே இங்கு இன்னொரு கொலை
நடந்துள்ளதா என்ற பலத்த சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.” என்றார்.