நாடு தழுவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்க நேரிடும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. போக்குவரத்து அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.
வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் பொதுப் போக்குவரத்து வாகனங்களை கண்காணிப்பதற்கு சீருடையில்லாத பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தும் தீர்மானத்திற்கு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு போராட்டம்
அத்துடன், தனியார் பேருந்து சேவையின் மீது பொலிஸார் தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுக்கும் நோக்கில் புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
உரிய கட்கட்டுமான வசதிகள் இல்லாத காரணத்தினால் சில வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிட்டால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.