முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேராசிரியர் கணநாத் ஒபேசேகரவின் மறைவு : இரங்கல் வெளியிட்ட யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தர்

‘உலகப்புகழ் பெற்ற மானிடவியல் பேராசிரியரும் என் குருநாதருமான கணநாத் ஒபயசேகரா அவர்களின்  மறைவுச்செய்தி நெஞ்சில் எழுதும் துயரம் தாங்கமுடியாதது’ என யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கணநாத் ஒபேசேகர இன்று (25.03.2025) தமது 95வது வயதில் காலமானார்.

இவர் 1955 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலமொழியில் இளங்கலைப் பட்டத்தை பெற்றுள்ளார்.

மறைந்த பேராசிரியர் 

பின்னர், 1958 ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும், 1964 ஆம் ஆண்டு மானுடவியலில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார்.

பேராசிரியர் கணநாத் ஒபேசேகரவின் மறைவு : இரங்கல் வெளியிட்ட யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் | Professor Gananath Obeysekara Passes Away

மேலும், 1968ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையின் பேராசிரியராகவும், 1972ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை சான் டியாகோவின் (San Diego) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், மறைந்த பேராசிரியர் கணநாத் ஒபேசேகரவிற்கு யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் (N. Shanmugalingam) தனது இரங்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இறங்கள் செய்தியில், “இலங்கை சமூகங்களின் மானிடவியலை ஆழ எழுதிய புலமையாளர். எண்ணற்ற நூல்களின்  ஆசிரியர்.  அறிவுத் துணி வோடு மானிடவியலுக்கு அவராற்றிய பங்களிப்பு இணையிலாதது.

மானிடவியல் பேராசிரியர்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விரிவுரையாளராக தொடங்கிய பயணம் ,அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தின் மானிடவியல் பேராசிரியராக, துறைத்தலைவராக உயர்வுகளைக் காணும் தனிப்பட்டமுறையில் என் பல்கலைக்கழக மாணவப்பருவத்திலேயே அவரின் ஆய்வு உதவியாளனாகும் பேறு எனக்கானது.

பேராசிரியர் கணநாத் ஒபேசேகரவின் மறைவு : இரங்கல் வெளியிட்ட யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் | Professor Gananath Obeysekara Passes Away

எங்கள் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், மானிடவியல் கலைத்திட்ட உருவாக் கத்தில், என் கலாநிதிப்பட்ட ஆய்வில் வழிகாட்டியானவர்.

எங்கள் புலமை அடையாளமாக  அவர் நீழலில் நிமிர்ந்திருந்தோம். இன்று தனித்தோம் அவர் மேலான நினைவுகளை, புலமை மரபின் தனித்துவங்களை காத்து நிற்றலை அவருக்கான அஞ்சலியாக்குவோம்! என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.