Courtesy: H A Roshan
திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டம், நேற்றையதினம்(14.02.2025) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, 2025ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாவட்டத்தில் செயற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் செயற்திட்டங்கள் பற்றிய தெளிவூட்டல் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.
பிரதிநிதிகளின் கருத்து
கடந்த 2024ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கும் இதன்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.