நாட்டிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எவ்வளவு காலம் கடமையாற்றினாலும் அவர்களின் பதவி உயர்வுக்கான செயல்முறைகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இன்றைய (04.09.2024) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுக்கான செயற்பாடுகள் குறித்து பல
சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பி இருக்கின்றேன்.
97,800 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
இலங்கை பூராகவும் மத்திய
அரசாங்கத்திற்கு கீழும், மாகாண சபைகளுக்கு கீழும் 97,800 அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்றார்கள்.
இவர்கள் எவ்வளவு காலம்
கடமையாற்றினாலும் அதில் பதவி உயர்வுக்கான செயல்முறைகள் இல்லை.
அவர்கள் 30
வருடம் சேவையில் இருந்தாலும், அபிவிருத்தி உத்தியோகத்தர் தகைமையில் முதலாவது
தரத்திற்கு மாத்திரமே செல்ல முடியும்.
முகாமைத்துவ உத்தியோகத்தர்
எனவே இவர்களுக்காக பதவி உயர்வுக்கான
செயற்பாடுகளை தயாரிக்க வேண்டும். இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் கேள்வி
எழுப்பினாலும், அதற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை.
இந்த விடயம் குறித்து அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதற்கான பதில்கள்
கிடைக்கவில்லை.
அத்துடன் முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாறான பிரச்சினையே காணப்படுகின்றது“ என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.