ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்படவுள்ள போராட்டத்திற்கு எதுவித ஆதரவும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஆதரவாளர்கள்
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமது கட்சி இணையக் கூடாது என்று தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் சிலர் இன்று அக்கட்சி தலைமையகத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
எனினும் குறித்த ஆர்ப்பாட்டத்துடன் தமது கட்சிக்கு எதுவித தொடர்பும் இல்லை என்பதுடன், அவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கு எதுவித ஆதரவும் வழங்கப்பட மாட்டாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.