யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர்
போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், நேற்று(4) பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 6 மணிக்கு
நிறைவடைந்த நிலையில், இன்று (5) காலை மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.
போராட்டம்
சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டமானது, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








