திருகோணமலை-மூதூர் பாடசாலையில் கடமை புரியும் அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(8) மூதூர் வலயக் கல்வி பணிமணைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் சேவைக்குள் தம்மை இணைப்புச் செய்யுமாறு கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோரிக்கை
இதன் போது எங்கள் விடயத்தில் தவறு இழைக்கும் அரசு நீதியை பெற்றுத் தருமா ,
ஐந்து வருடங்களாக பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைப்பு
செய்யப்பட்டு ஆசிரியர்களாக பணியாற்றுகின்ற எங்களுக்கு நீதி வேண்டும் போன்ற பல
வாசகங்களை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






