முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் நடைபெற்ற EMS ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம்

புதிய இணைப்பு

நாடு தழுவிய EMS (Express Mail Service) ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாணம் – அஞ்சல் அலுவலகத்திலும் இடம்பெற்றது.

இன்று (08.3.2025) காலை யாழ்ப்பாண பிரதேச அஞ்சல் அத்தியச்சகர் S.A.D.பெர்ணாந்து தலைமையில்
நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

சர்வதேச கடுகதித் தபால் சேவையான EMS மூலம் இலங்கை உள்ளிட்ட 48 நாடுகள்
பொருட்களை பரிமாற்றிக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் நவீன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. 

யாழில் நடைபெற்ற EMS ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் | Provide Fertilizer Subsidy To Paddy Growers

இந்த கலந்துரையாடல் இன்று (08.03.2025) காலை 9.00 மணிக்கு வட மாகாண ஆளுநர் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்பொது நவீன முறையில் விவசாயத்தை மேற்கொள்ளும் போது சேதன பசளை பயன்படுத்தும் விவசாயிகள் இயற்கை பசளைக்கு மாறுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மகளிர் தின நிகழ்வு

யாழில் நடைபெற்ற EMS ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் | Provide Fertilizer Subsidy To Paddy Growers

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் விவசாயம் தொடர்பான திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை சுதந்திரப் பறவைகளின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வு கூட்டுறவு மண்டபத்தில் 08.03.2025 இன்று காலை 10.00 மணியளவில் சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் தலைவி முராளினி தினேஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில்
முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற
உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு
கட்சியின் பதில் தலைவருமான சி.வி.கே சிவஞானம் ஆகியோர்கள் பிரதமர் அதிதிகளாக
கலந்து கொண்டு பன்னாட்டு மகளிர் தினத்தை சிறப்பித்துள்ளார்.

வவுனியா

இலங்கை தபால் திணைக்களத்தின் நாடு தழுவிய இஎம்எஸ் (EMS) விற்பனை ஊக்குவிப்பு
நிகழ்ச்சித்திட்டத்தின் வவுனியா மாவட்டத்திற்கான நிகழ்வு வவுனியா தபால்
நிலையத்தில் இன்று(08) இடம்பெற்றுள்ளது.

இச்சேவை மூலம் பொருட்கள் ஆவணங்கள், தபால் போன்றவற்றை அரச பாதுகாப்புடனும்
விரைவாகவும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

யாழில் நடைபெற்ற EMS ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டம் | Provide Fertilizer Subsidy To Paddy Growers

இந்த செய்யட்பாட்டினை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக வவுனியா தபால்
ஊழியர்களினால் வவுனியா நகரப் பகுதியில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றதோடு
துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் உட்பட தபால் ஊழியர்கள்
பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.