முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்ற தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலே முக்கியம் : மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் நேற்று  (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதியின் உரைக்கமைய நாடாளுமன்றம் ஓரிரு தினங்களுக்குள் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒக்டோபர் 26ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தை கலைத்தல்

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்ததன் பின்னர் 52 – 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும். நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவிக்கும் வர்த்தமானியில் வேட்புமனு தாக்கலுக்கான தினத்தையும் தேர்தலுக்கான தினத்தையும் குறிப்பிட வேண்டியதில்லை.

நாடாளுமன்ற தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலே முக்கியம் : மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு | Provincial Council Election Parliamentary Election

அதாவது இவ்வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் டிசம்பர் முதல் வாரத்துக்குள் நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தற்போதுள்ள நாடாளுமன்றத்துக்கும் மக்கள் ஆணை கிடையாது.

எனவே இந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும். அதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் நடத்தி மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

13ஆவது திருத்தம்

தற்போது மாகாண சபைகளும் காணாமலாக்கப்பட்டிருக்கின்றன. அவை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக நாம் முன்னிற்போம்.

நாடாளுமன்ற தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலே முக்கியம் : மகிந்த தேசப்பிரிய அறிவிப்பு | Provincial Council Election Parliamentary Election

13ஆவது திருத்தமா அல்லது 13 பிளஸா என்பது இரண்டாம் பட்சமாகும். ஆனால் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் ஸ்திரமாகவுள்ளோம்“ என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்