முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு: இணக்கம் வெளியிட்ட அரச – தனியார் உரிமையாளர்கள்

எதிர்வரும், 01.02.2025 இலிருந்து யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து
நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர
சேவைகளை ஆரம்பிப்பதற்கு இரு தரப்பினரும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயன் தலைமையிலான கலந்துரையாடலில் இணக்கம் வெளியிட்டனர்.

இதனையடுத்து எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து இணைந்த நேர
அட்டவணையின் கீழ் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பமாகும்
என ஆளுநர் அறிவித்துள்ளார்.

போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில்
இன்று வெள்ளிக்கிழமை மாலை (17.01.2025) இடம்பெற்றது.

இலங்கையில் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இலங்கை போக்குவரத்துச்
சபையும், தனியார் பேருந்து உரிமையாளர்களும் இணைந்து ஒரே இடங்களிலிருந்து
சேவைகளை நடத்திவருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், வடக்கு
மாகாணத்திலும் அவ்வாறான நிலைமையை ஏற்படுத்துவதற்காக பல தடவைகள் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டபோதும் அவை பலனளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அனுமதிக்க முடியாது

இனிமேலும்
அவ்வாறு ஒருங்கிணைந்த சேவையை நடத்தாமல் இருப்பதற்கு அனுமதிக்க முடியாது எனக்
குறிப்பிட்ட ஆளுநர், இதற்கு இரு தரப்பும் இணங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

யாழ். போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு: இணக்கம் வெளியிட்ட அரச - தனியார் உரிமையாளர்கள் | Public And Private Owners Who Have Issued Consent

வடக்கு மாகாண மக்களுக்காகவே சேவையாற்றுகின்றீர்கள் எனச் சுட்டிக்காட்டிய
ஆளுநர், இந்தச் சேவையை வழங்கும் நீங்களும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே
என்பதை நினைவிலிருத்தி, விட்டுக்கொடுப்புக்களுடன் இணக்கத்துக்கு வருமாறும்
கோரினார்.

இணைந்த நேர அட்டவணையை நடைமுறைப்படுத்தினால் ஒருங்கிணைந்த சேவைக்கு தயாராக
இருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கடிதம் மூலம்
தெரியப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அதற்கு அமைவாக வடக்கின் அனைத்து
மாவட்டங்களிலும் இணைந்த நேர அட்டவணையை வர்த்தமானியில் குறிப்பிட்டவாறு
நடைமுறைப்படுத்துவது என்றும், முதல் கட்டமாக இலங்கை போக்குவரத்துச் சபையும்,
தனியார் பேருந்து உரிமையாளர்களும் யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து
நிலையத்திலிருந்து சேவைகளை எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிப்பது
எனவும் இணக்கம் காணப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.