பணமோசடி வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொலன்னறுவை, ஜெயந்திபுராவில் வசிக்கும் ஒருவர், களுத்துறை நகரில் ஒரு வங்கியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க வந்ததாகவும், அங்கிருந்த ஒரு தெரியாத நபரிடம் உதவி கோரியதாகவும், இதன்போது, குறித்த நபரிடம் தனது ஏ.டி.எம் அட்டை மற்றும் கடவுச்சொல்லைக் கொடுத்து, தனக்கு மற்றொரு ஏ.டி.எம் அட்டையைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அதன் பிறகு தனது ஏ.டி.எம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.200,000 எடுத்ததாகவும் முறைப்பாடு அளித்துள்ளார்.
மேற்படி சந்தேக நபர் கடந்த காலங்களில் இதேபோன்ற நிதி மோசடிகளைச் செய்ததாக களுத்துறை தெற்கு காவல் நிலையத்திலும், வாதுவ காவல் நிலையத்திலும் நான்கு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
மேலும் விசாரணையில், இந்த சந்தேக நபர் நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இதுபோன்ற மோசடிகளை வழக்கமாகச் செய்யும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தலைமை காவல் ஆய்வாளர் களுத்துறை தெற்கு 071-8591691
குற்றப்பிரிவு OIC களுத்துறை தெற்கு 071-8594360

