வட மாகாணத்தில் உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(06) இடம்பெற்றதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் கட்டண திருத்தம்
அதேநேரம், உத்தேச மின்சார கட்டணம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் நாளை மறுதினம்(08) பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.