Courtesy: Sivaa Mayuri
அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் வரை, தற்போதைய மின்சாரக் கட்டணத்தை பேணுவதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்திரலால், இதனை தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் பொது கருத்தாடல்கள் ஆரம்பிக்கும் என்றும், மின்சார சபையின் முன்மொழிவு குறித்து ஆணைக்குழு விசேட ஆய்வு ஒன்றை மேற்கொள்ளும் என்றும் சந்திரலால் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் கருத்து
மேலும், ஆய்வை முடித்து, பொதுமக்களின் கருத்துகளை அறிந்துக்கொண்டதன் பின்னர், மின்சார கட்டணம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை மின்சாரசபை, தனது பரிந்துரையை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு 2024 டிசம்பர் 6 ஆம் திகதியன்று சமர்ப்பித்தது.