மஹரகம(Maharagama) அபேக்சா மருத்துவமனையில் மின்சார அமைப்பு கோளாறு காரணமாக கதிர்வீச்சு சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரமவை கோடிட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக புற்றுநோய் நோயாளிகளின் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் மூன்று இயந்திரங்கள் கடந்த டிசம்பர் 31 முதல் செயல்படவில்லை.
சிகிச்சைகளில் பாதிப்பு
இந்த இயந்திரங்களில் இரண்டு மீட்டமைக்கப்பட்டாலும், ஒன்று செயல்படாமல் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இயந்திரங்கள் ஒவ்வொன்றும் பொதுவாக தினமும் சுமார் 60 புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.