பலத்த காற்று மற்றும் தண்டவாளங்களில் மரங்கள் வீழந்துள்ளமையால், இரண்டு
முக்கிய தொடருந்து பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக
தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாற்று பயண ஏற்பாடு
இதன் விளைவாக, மட்டக்களப்பு இரவு அஞ்சல் தொடருந்தும், பிரதான பாதையில்
ரம்புக்கனை நோக்கிச் செல்லும் பல தொடருந்துகளும் தாமத பயணங்களை
மேற்கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், இடையூறுகள் தொடர்பாக மேலும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
எனவே புதுப்பிப்புகள் மற்றும் மாற்று பயண ஏற்பாடுகளுக்கு பயணிகள் தொடருந்து
அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

