திருகோணமலையில் நோன்பு பெருநாள் தினமாகிய இன்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து
பேரணி ஒன்று இடம் பெற்றுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான இக்கண்டணப் பேரணியில்
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்ரான் மஹ்ரூப்
மேலும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான மற்றுமொரு நிகழ்வு கிண்ணியா குறிஞ்சாக்கேணி மைதானத்தில் இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.