முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தடைகாலம் முடிந்து தொழிலுக்கு சென்ற இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

60 நாட்கள் வரையான கடற்றொழில் தடைகாலம் முடிந்து தொழிலுக்கு சென்ற இராமேஸ்வரம் (Rameswaram) பகுதி கடற்றொழிலாளர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

கடற்றொழில் தடைகாலம் முடிவடைந்ததையடுத்து இராமேஸ்வரம், மண்டபம், தொண்டி,
திருவாடானை உள்ளிட்ட கடற்றொழில் துறைமுகங்களில் இருந்து சுமார் 1500இற்கும்
மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலாளர்கள் நேற்று (15.06.2024) அதிகாலை தொழிலுக்கு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து, அவர்கள் இன்று (16.06.2024) அதிகாலை கரை திரும்பிய நிலையில் தாங்கள் எதிர்பார்த்த
இறால், நண்டு, கணவாய் போன்ற விலை உயர்ந்த மீன்கள் அதிக அளவு கிடைக்காததால் நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

உரிய விலை நிர்ணயம் 

மேலும், டீசல் விலை உயர்வு மற்றும் கடற்றொழில் சாதனங்கள் விலை உயர்வு என கடும்
சிரமத்திற்கு மத்தியில் தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் பிடித்து வந்த
குறைந்தளவு இறால் மற்றும் நண்டு மீன்களுக்கு தனியார் மீன் ஏற்றுமதி
நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

rameswaram-fishermen-request-to-increase-price-

மேலும், உரிய விலை நிர்ணயம் செய்யாமல் ரூபா 700இற்கு விற்பனை செய்யப்பட்ட இறால் ரூபா 300இற்கு கொள்முதல் செய்வதால் கடற்றொழிலாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். 

எனவே, கடற்றொழில் தடை காலங்களில் அதிக திறன் கொண்ட என்ஜின்களை
பயன்படுத்தும் நாட்டு படகுகளுக்கும் தொழிலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

rameswaram-fishermen-request-to-increase-price-

அதேவேளை, மத்திய, மாநில அரசுகள் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய
வேண்டும் எனவும் தற்போது கடற்றொழிலாளர்கள் பிடித்து வந்துள்ள மீன்களுக்கு தனியார்
மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலை நிர்ணயம் செய்ய மாவட்ட ஆட்சியர்
தலைமையில் தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.