முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் வேதனை

மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் கடற்றொழிலுக்கு சென்ற
ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல்  நடாத்தி விரட்டி அடித்ததாக கரை திரும்பிய கடற்றொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

மேலும் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடற்றொழிலுக்கு சென்ற
கடற்றொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த மீன்கள் பிடிபாடு இல்லை எனவும்  கவலை வெளியிட்டுள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம்

தமிழக அரசால் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த
ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தொடங்கி ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவுடன்
நிறைவடைந்தது.

மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் வேதனை | Rameswaram Fishers Attacked At Sea Post Ban Fishin

மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்கு செல்ல கடந்த திங்கட்கிழமை தயாரான நிலையில் வங்க கடலில்
வீசிய சூறைக்காற்று காரணமாக கடற்றொழிலுக்கு தமிழ்நாடு அரசால் கடற்றொழிலாளர்களுக்கு
வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து 64 நாட்கள் பின் நேற்று ராமேஸ்வரம்
மீன் பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள்  கடற்றொழிலுக்கு கடலுக்குச் சென்றனர்.

இலங்கை கடற்படையினர்

கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த
போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை
தாண்டி கடற்றொழில் ஈடுபட்டதாக கடற்றொழிலாளர்களை விரட்டி அடித்ததாகவும், ஒரு சில படகில்
இருந்த கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் வேதனை | Rameswaram Fishers Attacked At Sea Post Ban Fishin

இதனால்
பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தடைகாலம் முடிந்து கடற்றொழிலுக்குசெல்லும் கடற்றொழிலாளர்களுக்கு இறால், நண்டு
கணவாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் அதிகளவு
கிடைக்கும் ஆனால் மீன்பிடி தடைக்காலத்தின் போது இயந்திரம் பொருத்தப்பட்ட
நாட்டுப்படகு கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டதால் தடைகாலம் முடிந்து கடற்றொழிலுக்கு சென்ற விசைப்படகு கடற்றொழிலாளர்கள் எதிர்பார்த்த மீன்பாடு இல்லை இதனால் படகு
ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரைஇந்திய பண்த்தில் நஷ்டம்
ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.