முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் போக்குவரத்து : வெளியான புதிய தகவல்

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க, தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் துறை வாயிலாக, 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னார் வரை, 1914 முதல் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. கடந்த 1964ம் ஆண்டு வீசிய கடுமையான புயல் காரணமாக, தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கியது.

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்து, இலங்கை போர் காரணமாக, 1984ம் ஆண்டு மத்திய அரசால் நிறுத்தப்பட்டது.

ஒரு மணிநேர பயணம்

அதன்பின், கப்பல் போக்குவரத்து தொடக்கப்படவில்லை. ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பலில் ஒரு மணி நேரத்திற்குள் சென்று விட முடியும். அங்கிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்ல,தொடருந்து வசதி உள்ளது.

ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து : வெளியான புதிய தகவல் | Rameswaram Thalaimannar Shipping Line

இதனால், விமானப் பயணச் செலவு பெருமளவு குறையும். எனவே, ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை தொடக்க, தமிழக சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் இயங்கும், தமிழக கடல்சார் வாரியம் வாயிலாக திட்டமிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை

இதற்காக, 118 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அடுத்த கட்ட பணிகள் தொடங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.

ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து : வெளியான புதிய தகவல் | Rameswaram Thalaimannar Shipping Line

 இது குறித்து, மாநில சிறு துறைமுகங்கள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்க, ராமேஸ்வரம், தலைமன்னார் துறைமுகங்களை சீரமைக்க வேண்டும். ராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசு வாயிலாக பணிகள் நடந்து வருகின்றன.

 தலைமன்னார் துறைமுகத்தை இலங்கை அரசு இன்னும் மேம்படுத்தவில்லை. இதனால், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. மேலும், மத்திய அரசு வாயிலாக இத்திட்டத்தை சாகர்மாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

எனவே, திட்ட மதிப்பீடு தயாரித்தும், அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.