ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பிரசாரக் கூட்டம் வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து இரு பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குருமன்காட்டில் இருந்து இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தானின் (K. Kadar Mastan) ஆதரவாளர்கள் பேரணியாக ஜனாதிபதியின் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் வைரவபுளியங்குளம் மைதானத்தை இன்று (01) சென்றடைந்திருந்தனர்.
பிரசாரக் கூட்டம்
இதேவேளை வவுனியா, குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பகுதியில் இருந்து வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபனின் (Kulasingam Dhileeban) ஆதரவாளர்கள் பிரசார கூட்டம் இடம்பெறும் மைதானத்தை பேரணியாக
சென்றிருந்தனர்.
குறித்த இரண்டு பேரணிகளிலும் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.