எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவையும் (Sajith Premadasa) ஐக்கிய மக்கள் சக்தியையும் (SJB) வீழ்ச்சியடைய செய்யும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முக்கியமான அரசியல் சூழ்ச்சியின் மையத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றும் அதன் சின்னமான “தொலைபேசி” சின்னத்தின் கீழ் போட்டியிடாமல் புதிய சின்னம் மற்றும் பரந்த கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு அழுத்தம் அழுத்தம் கொடுக்க ரணில் வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதன்போது, ரணில் விக்ரசிங்கவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் பல SJB நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முயற்சியில் பங்கு வகிக்கின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணிலின் அரசியல் நோக்கம்
ரணிலின் முன்னைய நிர்வாகத்தின் போது இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுபான உரிமம் மற்றும் பரவலாக்கப்பட்ட அரசாங்க நிதி போன்ற சலுகைகளால் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த நாடாளுமன்ற குழுவினர் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் நோக்கங்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) ஒரு தேர்தல் கூட்டணிக்கு கலந்துரையாடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.