முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல : பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்றும், அது நீதிமன்றத்தின் சுயாதீன செயற்பாடு என்றும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது பேசுபொருளாக மாறியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் (Ananda Wijepala) ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாரையும் கைது செய்வதா? அல்லது அவரை விளக்கமறியலில் வைப்பதா? என்பது குறித்து தானோ அல்லது அரசாங்கமோ தீர்மானிப்பது இல்லை.

 குற்றப்புலனாய்வு திணைக்களம்

அத்துடன், எதிர்தரப்பினர் அனைவரும் ஓர் அணியில் இணைவார்கள் என்பதை அறிந்திருக்கின்றோம், குறித்த கூட்டணியால் அரசாங்கத்திற்கு எவ்வித சவாலையும் ஏற்படுத்த முடியாது.

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல : பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் | Ranil S Arrest Isn T Political Revenge Defence Min

யாரேனும் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுமாயின் அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் எடுக்கும்.

அத்துடன், இங்கு யாருடைய ஜனநாயக உரிமையும் பறிக்கப்படவில்லை, ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளுக்கு அமையே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 நீதிமன்றத்திடம் எடுத்துரைக்கலாம்

கொள்ளையடித்து, ஊழல் செய்வோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுப்பதை, ஜனநாயக உரிமை மீறப்படுவதாக கூற முடியுமா? 

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல : பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் | Ranil S Arrest Isn T Political Revenge Defence Min

அத்துடன், இந்த கைது ஜனாதிபதியோ அல்லது அமைச்சரோ முன்னெடுத்த நடவடிக்கை அல்ல, இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை புரிந்துகொள்ள முடியாது எனின், எதனையும் செய்ய முடியாது, அரசியல் பழிவாங்கலை முன்னெடுத்திருந்தால் அதனை நீதிமன்றத்திடம் எடுத்துரைக்க முடியும்” என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்