முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலின் செயலாளர் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

புதிய  இணைப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்தது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று (23) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டத் துறைக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் கலிங்க ஜெயசிங்க இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை கைது செய்யும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், விசாரணை நடந்து வருவதால் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்த சட்டவிரோத செயல் தொடர்பாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் அரச நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

கைது நடவடிக்கை

இதன்பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நேற்று(22) வாக்குமூலம் வழங்க சிஐடிக்கு வரவழைக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

ரணிலின் செயலாளர் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு | Ranil Secretary Saman Ekanayake Arrested In Future

பின்னர், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்படி, ரணிலின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கைது செய்யப்படுவார் என  தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.