முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச ஊடக நேர்காணலில் அச்சுறுத்திய ரணில்

பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வழக்குத்
தொடுப்பதில் இருந்து பாதுகாக்கவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் ஆறு முறை பிரதமருமான ரணில் விக்ரமசிங்க,
நாளை (6) ஒளிபரப்பாகும் சர்வதேச ஆங்கில தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்கான நேர்காணலின் போது, ​இது தொடர்பான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களுடன்
அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, தனது
நிர்வாகம் நம்பகத்தன்மையுடன் விசாரிக்கத் தவறிவிட்டது என்ற
குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகள் 

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க, செய்தியாளருடன் ஒரு மணி நேர
நேர்காணலின் இடையில், நேர்காணலில் இருந்து விலகிச்செல்வதாக அச்சுறுத்தியுள்ளார். 

சர்வதேச ஊடக நேர்காணலில் அச்சுறுத்திய ரணில் | Ranil Threats In An International Media Interview

ஆனால் இறுதியில் நாட்டின் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து போர்க்குற்ற
விசாரணைகளை அரசாங்கம் கையாண்ட விதம் மற்றும் 1980 களின் பிற்பகுதியில் அவரது
கண்காணிப்பின் கீழ் செய்யப்பட்ட சித்திரவதை குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை
உள்ளடக்கிய ஒரு தீவிரமான விவாதத்திற்காக, அவர் நேர்காணலில் தொடர்ந்து
அமர்ந்திருந்தார்.

“இலங்கை நாட்டில், வழக்குத் தொடருவது குறித்து முடிவெடுப்பது ஒரு அரசியல்
பிரமுகர் அல்லாத சட்டமா அதிபர் தான் – நாங்கள் அவருக்கு ஆதாரங்களை மட்டுமே
அனுப்ப முடியும்,” என்று விக்ரமசிங்க கூறினார்,

இந்தநிலையில், 2022 ஆம் ஆண்டு வெகுஜன போராட்டங்களைத் தொடர்ந்து நாட்டை விட்டு
வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அவர் பாதுகாப்பு
அளித்தாரா என்று கேட்டபோது அதனை ரணில் மறுத்தார்.

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளில் ஐஎஸ்ஐஎஸ்-சார்புடைய ஒருவரால்
நடத்தப்பட்ட “பிற சக்திகளை” அவரது சொந்த அரசாங்கம் பாதுகாத்ததாக, கத்தோலிக்க
திருச்சபையின் குற்றச்சாட்டுகள் குறித்தும் செய்தியாளர் விக்ரமசிங்கவிடம் கேள்வி
எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த , விக்ரமசிங்க, அந்த குற்றச்சாட்டுகளை “அனைத்து
முட்டாள்தனம்” என்றும் “கத்தோலிக்க திருச்சபையின் அரசியலுக்கு” ஒரு
எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.

 உள்நாட்டுப் போர்   

இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் முட்டாள்தனமாகப் பேசுகிறாரா?”
என்று செய்தியாளர் தெளிவுபடுத்திக்கொண்ட போது, அதற்கு “ஆம்,” என்று விக்ரமசிங்க
கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட
ஆயிரக்கணக்கானோருக்கு நீதி வழங்கப்பட்டதா என்று, செய்தியாளர் கேட்டார். எனினும் “இல்லை. எந்த சமூகத்திற்கும் நீதி வழங்கப்படவில்லை என்று ரணில்
தெரிவித்தார்.

சர்வதேச ஊடக நேர்காணலில் அச்சுறுத்திய ரணில் | Ranil Threats In An International Media Interview

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தடுக்கப்பட்டதையும், சில மருத்துவமனைகள்
மீது குண்டுவீசப்பட்டதையும் அவர் ஏற்றுக்கொண்டார்,

ஆனால் அத்தகைய குண்டுவெடிப்புகள், திட்டமிட்டு முறையாக நடந்தன என்பதை, அவர்
மறுத்தார்.

மருத்துவமனைகளில் மீது விமானப்படை குண்டுவீசித் தாக்குதல் நடத்திய
சந்தர்ப்பங்கள் இருந்தன, அவற்றில் சிலவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது
என்று ரணில் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் . குழுவின் கூற்றுப்படி, இலங்கை அரசாங்கப் படைகள் போரில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதைத் தடுத்தன என்பத்தை செய்தியாளர், கேள்வியாக
தொடுத்தார்.

இதற்கு பதில் அளித்த ரணில், அது நடந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்,”
என்று கூறினார்.

போர்க்குற்றங்கள் செய்ததாக, அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம் சாட்டிய
ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, ஜனாதிபதியாக மீண்டும் இலங்கையின் ஆயுதப்
படைகளுக்குத் தலைவராக நியமித்ததற்கான காரணம் குறித்து விக்கிரமசிங்க
கூறுகையில், “ஒரு தேர்தலின் போது இராணுவத் தளபதிகளை மாற்றக்கூடாது என்பது ஒரு
நடைமுறை” என்று குறிப்பிட்டார்.

சர்வதேச ஊடக நேர்காணலில் அச்சுறுத்திய ரணில் | Ranil Threats In An International Media Interview

“நான் பொறுப்பேற்றபோது, ​​அதைச் சரிபார்த்தேன், ஜெனரல் சில்வா அதில்
ஈடுபடவில்லை என்பதில் நான் திருப்தி அடைந்தேன்.” என்று ரணில் விக்ரமசிங்க
தெரிவித்தார்.

1980களின் பிற்பகுதியில் ஒரு அமைச்சராக அவர் வசித்து வந்த பட்டலந்த என்ற
வீட்டுத் தொகுதியில், சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை, சித்திரவதை
செய்யப்பட்டமை மற்றும் கொலைகள் குறித்து தனக்குத் தெரியும் என்று அரசாங்க
ஆணையகம் கூறிய குற்றச்சாட்டுகளை விக்ரமசிங்க மறுத்துரைத்தார்.

இதற்கிடையில், “இரண்டு ஆண்டுகளில், நான் பொருளாதாரத்தை மீண்டும் பாதையில்
கொண்டு வந்தேன். அதாவது பணவீக்கம், சுருக்கம். இது மிகவும், மிகவும் கடினம்
என்று அவர் தெரிவித்தார்.

“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் வேலையைச் செய்தேன் என்று
ஜனாதிபதியாக அவர் செய்த ஒரு முக்கிய IMF ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டினார்.

இலையெனில் “நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும்
என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.