நடைபெற போகும் ஜனாதிபதி தேர்தலையொட்டி வவுனியாவில் (Vavuniya) ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) பிரச்சார கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது இன்று (01) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் ஆகியோரின் ஏற்பாட்டில் வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரச்சார கூட்டம்
கூட்டத்தில் சுமார் 5000 வரையிலான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், ஜனாபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அல்சப்ரி, நீர்வழங்கல் வடடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, முன்னாள் அமைச்சர் சுமதிபால, சுதந்திர கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வாசல, ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ம.மயூரதன் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.