கண்டி(kandy) பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு திருமணம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்து நிதி மோசடி செய்த வழக்கில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை(ranjan ramanayake) விடுதலை செய்ய கண்டி பிரதான நீதவான் சாமர விக்ரமநாயக்க இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.
திருமணம் செய்து தருவதாக கூறி பெண்ணிடம் 10 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக குறித்த பெண் காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நீதிமன்றங்களில் இடம்பெற்ற வழக்கு
சுமார் 13 வருடங்களாக கண்டி நீதவான் நீதிமன்றத்திலும், மேலதிக (01) நீதவான் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு, தீர்ப்பை கண்டி பிரதான நீதவான் சாமர விக்கிரமநாயக்க திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.
தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எவ்வித அடிப்படையுமின்றி தமக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நடிகையின் அநாகரிக செயல் :ஹோட்டலில் சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை
உண்மை வெல்லும் என்பதை நிரூபித்த மற்றுமொரு தருணம்
எனினும், தாமதமானாலும் உண்மை வெல்லும் என்பதை நிரூபித்த மற்றுமொரு தருணம் இன்று, இந்நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தை நிரூபித்த மற்றுமொரு தருணம் இது.
லண்டன் செல்லவுள்ள அனுர! புலம்பெயர்ந்தோரையும் சந்திக்கவுள்ளதாக தகவல்
இந்த வழக்கு 13 வருடங்களாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக சுமார் 80 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளதாகவும், விசாரணை நாட்களுக்காக வெளிநாடுகளில் இருந்தும் வர வேண்டி இருந்ததாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |