கிளிநொச்சிப் பகுதியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி
கிராமத்தில் வசிக்கும் கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளராக
பணியாற்றி வரும் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நோய் பரவும் அபாயம்
காய்ச்சலுக்கு
தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்றபோது இவரின் குருதி
மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலேயே எலிக்காய்ச்சல் இருப்பது
இனங்காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிலைமையைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார
பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

