மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) பிணை முறி மோசடியை விடவும் பாரியளவிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் (Rauf Hakeem) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒன்லைன் விசா பெற்றுக் கொள்வதற்கான கட்டண அறவீட்டு முறையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்லைன் விசா பெற்றுக்கொள்வதற்கான ஆவண பரிசீலனை நடவடிக்கைகள் வீ.எப்.எஸ் குளோபல் (VFS Global) என்னும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்த நிறுவனத்தின் ஊடாக விசா வழங்கும் போது பாரியளவு மோசடி இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மோசடியானது மத்திய வங்கி பிணை முறி மோசடியை விடவும் பத்து மடங்கு அதிகமானது என ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
நிதி ஒழங்குவிதிகள்
அத்துடன், இதில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலையீடு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
புதிய விசா கட்டண அறவீடு காரணமாக கடந்த ஆண்டு இறுதி மாதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டின் ஆரம்ப காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும், கட்டண அறவீட்டு முறையின் மூலம் நாட்டின் நிதி ஒழங்குவிதிகள் மீறப்பட்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.