முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மோசமான பாதிப்புக்குள்ளான மன்னார்: ரவிகரன் எம்.பி அரசிடம் விடுத்த கோரிக்கை

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரமின்றி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் உள்ளவர்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி (Vanni) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் (Mannar) மாவட்டசெயலகத்தில் நேற்றையதினம் (28.11.2024) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுற்று நிருபங்களின் படி அனைவருக்கும் உணவுப்பொருட்கள் வழங்க தற்போது நிதி மூலங்கள் எதுவுமில்லை எனத் தெரிவித்த மன்னார் மாவட்ட செயலர், ஆளுநர் மற்றும், கூட்டுறவு பிரதியமைச்சர் ஆகியோரிடம் 38மில்லியன் ரூபாய் நிதிக்கான கோரிக்கை
தம்மால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிதி கிடைத்தால் மக்கள் அனைவரும் ஒருவாரத்திற்கு பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

வெள்ள அனர்த்தம்

இறுகு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “வெள்ள அனர்த்தம் காரணமாக மன்னார் மாவட்டமும் மிக மோசமாகப்
பாதிக்கப்பட்டுள்ளது.

மோசமான பாதிப்புக்குள்ளான மன்னார்: ரவிகரன் எம்.பி அரசிடம் விடுத்த கோரிக்கை | Ravikaran Mp Requests People To Help In Mannar

மன்னாரில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டு மக்களோடும் கலந்துரையாடியிருக்கின்றேன்.

அந்தவகையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் தமது வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

நிவாரணங்கள்

இந் நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்தால் மாத்திரம்தான் மக்களுக்கான உணவுப் பொருட்களோ, நிவாரணங்களோ வழங்கப்படும் எனச் சொல்லப்படுகின்றது.

இதனால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு உணவுப்பொருட்களோ நிவாரணங்களோ எந்த உதவிகளும் கிடைக்வில்லை எனச் சொல்லப்படுகின்றது.

மோசமான பாதிப்புக்குள்ளான மன்னார்: ரவிகரன் எம்.பி அரசிடம் விடுத்த கோரிக்கை | Ravikaran Mp Requests People To Help In Mannar

எனவே இடைத்தங்கல் முகாமில் தாங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமின்றி, வீடுகளிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உணவுப் பொருட்களையும், நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அத்தோடு மன்னாரைப் பொறுத்தவரையில் வாய்க்கால் சீரின்மை காரணமாகவே மிக மோசமான வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும் மக்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர்.

எனவே கழிவுநீர் வாய்க்கால் விடயத்திலும் உரிய திணைக்களங்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.