பாதாள உலகமும் போதைப்பொருளும் பிடிப்படுவதே மெதமுலன குழப்பமடைவதற்கு காரணம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது, பாதாள உலக நபர்கள் பிடிபட்டாலும், அவர்களை ஆயுதங்களைக் காட்ட அழைத்துச் சென்று கொலை செய்வதில்லை என்பதால், அவர்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் கைகள் வெளிப்படுகின்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2029 இல் அதிகாரம்
இதேவேளை, எதிர்வரும் 50 வருடங்களுக்கான வேலைதிட்டங்களை ஒரே வருடத்தில் தமது அரசாங்கம் செய்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள மக்கள், 2029 இல் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தங்களுக்கு அதிகாரம் வழங்குவார்கள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், எதிர்க்கட்சி என்பது தரையில் தேங்காயை போல சிதறடிக்கப்பட்ட ஒழுங்கற்ற பைத்தியக்காரர்களின் குழு என்றும், அவர்கள் நாடு வீழ்ச்சியடையக் காத்திருக்கும் பாசாங்குத்தனமான மற்றும் இழிவான மக்கள் என்றும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.

