மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்படவர்களுக்கு
அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை புனரமைப்பு செய்யவிடாது தடுத்ததையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே பெரும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது
குறித்த நினைவு தூபியை புனர்நிர்மாணம் செய்து அதில்
இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படவர்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை
இன்று (09) பதித்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
34 வது நினைவேந்தல்
1990ம் ஆண்டு செட்டெம்பர் 9ம் திகதி கொக்குவில் பனிச்சையடீ. பிள்ளையாரடி,
சத்துருக் கொண்டான் உட்படபிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு
உட்பட்ட சிறுவர்கள் 42 பேரும் 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி பொதுமக்களை
இராணுவத்தினராலும் ஊர்காவல் படையினராலும, ஒட்டுக்குழுக்களாலும் படுகொலை
செய்யப்பட்டவர்களின் 34 வது நினைவேந்தல் இன்றையதினமாகும்.
அதனை முன்னிட்டு
சத்துருக் கொண்டானில் அமைக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்டவர்களின் தூபியில்
நினைவேந்தல் செய்வதற்காக படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள்
ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.
இதில் 1990ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொதுமக்கள் என்ற பெயர்
பொறிக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள்
பொறிக்கப்பட்ட கல்வெட்டை நினைவு தூபியில் பதித்துக் கொண்டிருந்தனர்.
இதன்பொது
அங்கு சென்ற கொக்குவில் பொலிஸார் இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல்
படையினர் ஒட்டுக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட கல்லெட்டை பதிக்க முடியாது
என வேலை செய்யவிடாது தடுத்துள்ளனர்.
இதன் போது அங்கிருந்த பொதுமக்கள் சமூக
செயற்பாட்டாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பெரும் வாய்த்தர்கம் ஏற்பட்டது
பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்நிலையில், பொதுமக்கள் இது 1995ஆம் ஆண்டு சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது ஓய்வு
பெற்ற நீதியரசர் கே.பாலிகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதில்
பாதிக்கப்பட்ட மக்களும் அதில் உயிர் தப்பியவர்கள் பலர் இராணுவத்தினர் ஊர்காவல்
படையினர் படுகொலை செய்தாக சாட்சியமளித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவு
செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் யாரால் படுகொலை நடந்தது என பெயர் பொறிக்க கல்வெட்டை ஏன் பொறிக்க
கூடாது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வாதத்தில் ஈடுபட்ட நிலையில் தொடர்ந்தும்
கல்வெட்டை பதிக்க விடாது பொலிஸார் தடுக்க முற்பட்டுள்ளனர்.
எனினும் அதனை மீறி கல்வெட்டு
பதிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அங்கு வந்த பொலிஸ் அத்தியட்சகர், பொதுமக்கள்
மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட 7 பேரை அங்கிருந்து இழுத்துச் சென்று
ஜீப்வண்டியில் ஏற்றியதுடன் வேலை செய்து கொண்டிருந்த மேசனை இழுத்து அவரை கொண்டு பதித்த கல்வெட்டை கழற்றி அராஜகத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு
பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஜீப்வண்டியில் இழுத்து ஏற்றப்பட்ட 7 பேரிடமும் வாக்கு மூலம்
பதிவு செய்த பின்னர் அவர்களை அங்கு இறக்கி விட்டுள்ளனர்.
அதேவேளை அங்கு பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் – குமார்