நாட்டில் தற்போது அதிகரித்துள்ள தங்கத்தின் விலை வரம்பு கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பாரிய உச்சத்தை அடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்துக்கு என உருவாகும் கேள்வி வரம்புகள் தங்கத்தின் விலை ஏற்றத்தில் தாக்கம் செழுத்துகின்றன.
அதன்படி இலங்கையில் இன்று செட்டியார் தெரு தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 364000 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 256,996ரூபா என்ற விலை வரம்பை இலங்கையின் தங்க விற்பனை பதிவு செய்திருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் இந்த விலையேற்றம் சுமார் 1இலட்சரூபா மதிப்பை தாண்டியுள்ளது.
இலங்கை மக்களிடையே தங்கம் ஒரு நம்பிக்கை மிகுந்த சொத்தாகவும் சேமிப்பு பொருளாகவும் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கை ஒன்றில், ஆண்டில் இதுவரை அமெரிக்காவின் தங்க இடிஎஃப்-களில் 32.7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில் தங்க இடிஎஃப்-களில் தற்போது 445 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
விலை உயர்வு
இதில் அரைவாசிக்கும் அதிகமாக அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டுள்ள நிதிகளில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இடிஎஃப்-களில்(அறிக்கை) இத்தகைய அதிக முதலீடு விலையை உயர்த்துகிறது.
இவ்வாறு இலங்கையில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சர்வதேச தங்கத்தின் தேவை அதிகரிப்பு தாக்கத்தை செலுத்துகிறது.
இலங்கையை பொருத்தமட்டில் ரூபாயின் மதிப்பு குறையும்போது, அமெரிக்க டொலருக்கு நிகரான தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
இலங்கையின் பொருளாதார சவால்களின் போது, நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது, இது தங்கத்தின் விலையையும் உயர்துவதாக கருதப்படுகிறது.
https://www.youtube.com/embed/ZuHo9aIeTgw