அரச சேவையில் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் ஆகியவை அரசியல் செல்வாக்கு அற்ற தகுதிகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
பொதுச் சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு முதல் அத்தியாவசிய பொது சேவைப் பணிகளில் 30,000 நபர்களை பணியமர்த்துவதற்கான மூலோபாய ஆட்சேர்ப்பு திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

