நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6 உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை விமானப்படை ஊடகப் பணிப்பாளர் குரூப் கப்டன் எரந்த கிகனகே ( Eranda Giganage) தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலைமை
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், பலாலி, இரத்மலானை, ஹிகுராக்கொடm வீரவில, அம்பாறை, அனுராதபுரம் விமானப்படை தளங்களில் உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக விசேட பயிற்சி பெற்ற விமானப்படை படைப்பிரிவின் விசேட அதிரடிப்படையினர் தயார்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், விமானப்படையின் கண்காணிப்பு விமானங்கள் அனர்த்த நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் எரந்த கிகனகே தெரிவித்துள்ளார்.