கூரை சூரிய மின்சக்தி கட்டணக் குறைப்புக்கு சூரிய மின்சக்தி தொழிற்சாலைகள்
சங்கம் கடும் ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளது.
இது இலங்கையின் சூரிய மின்சக்தித் துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று, அந்த
சங்கம் எச்சரித்துள்ளது.
கட்டணக் குறைப்பு
திறைசேரியின் செயலாளர் கே.எம். மகிந்த சிறிவர்தனவுக்கு எழுதிய கடிதத்தில்,
முன்மொழியப்பட்ட கட்டணக் குறைப்பு, 27 இல் இருந்து 23 ஆகவும், 19 இல் இருந்து
14 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

இது, 1,000க்கும் மேற்பட்ட வணிகங்களையும் 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின்
வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துகிறது என்று சங்கம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் கூரை சூரிய மின்சக்தி 500 மெகாவோட்டிற்கு மேல்
பங்களித்ததாகவும், இது புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் வேகமாக வளர்ந்து வரும்
பிரிவாக அமைந்ததாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

