கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் (Iyakachchi) அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) அன்னாசி பழச்செய்கையானது சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத் தலமே றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.
இங்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பசளைகளை பயன்படுத்தி இந்த அன்னாசி பழச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த அன்னாசி பழச்செய்கை தற்போது நல்ல விளைச்சலை தரக்கூடிய நிலையில் காணப்படுவதுடன் மேலும் அன்னாசி செய்கையை விரிவுப்படுத்த றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை தயாராகி வருகின்றது.