பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக பெயரிடப்பட்டு பட்டியலிடப்பட்ட பதினொரு தமிழ் பிரஜைகளின் பெயர்கள் பாதுகாப்புச் செயலாளரால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நீக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவுகளின்படி பட்டியலிடப்பட்ட தனிநபர்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யா கொந்தா, இந்த அறிவிப்பை வெளியிடுகையில்,
பெயர் பட்டியல்
“இந்த நபர்கள் இனி பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று கூறினார்.
பின்வரும் நபர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்:

1.கந்தலிங்கம் பிரேமராஜி
2.பாலசுப்ரமணியன் ஸ்ரீ ஸ்கட ராஜா
3.கோமோலிஸ் பிரபாகரன்
4.இளையதம்பி திரேச குமரன்
5.கந்தையா குஞ்சித பாதம்
6.காசிநாதன் கணேசலிங்கம்
7.உதயத் என்கிற கிருஷ்ணா குட்டி சுகுமாரன்
8.குரு குல சிங்கம்
9.தேவராசா செபமாலை
10.ஜாய் ஜினாஸ் துரை ராசா பிரியதர்ஷனி
11.வேலுப்பிள்ளை சிவனடியார்.
வர்த்தமானி அறிவிப்பு
ஆகியோரின் பெயர்கள் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த இந்த நபர்களில் பெரும்பாலோர் தற்போது வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
இதன்படி குறித்த ஆவணத்தில் இலங்கையில் (கொழும்பு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்) அவர்களின் குடியிருப்பு முகவரிகள் மற்றும் வெளிநாட்டு முகவரிகள் இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

