அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எனக்கு வாக்களிக்கவில்லை . அவர் நாமல் ராஜபக்ச முன்மொழிந்த ஜீவன் தொண்டமானுக்கே தனது வாக்கினை அளித்திருந்தார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எங்களுடைய இனத்திற்கு எதிராக செயற்படுகின்ற சிங்கள அரசியல் தலைவர்களை வைத்துத்தான் என்னை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என இவர்கள் நினைத்தால், அதையும் தான் எதிர் கொள்ள தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….

