முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வல்வெட்டித்துறை – ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் : அறிக்கை வெளியீடு

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தால் “வல்வெட்டித்துறை : ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்” என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வு இன்று (02) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தால் வெளியிடப்பட்ட இந்த
அறிக்கையை இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில்
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று வெளியிட்டு வைத்தனர்.

பாதிக்கப்பட்ட உறவு

பாதிக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்
அகவணக்கம்,பொதுச்சுடர் ஏற்றல், மலர் அஞ்சலியை தொடர்ந்து வரவேற்புரையை மூத்த
ஊடகவியலாளர் தி.எஸ் தில்லைநாதன் நிகழ்த்தியிருந்தார்.

இதையடுத்து, வல்வை முத்துமாரிஅம்மன் தேவஸ்தான பிரதம குரு சோ தண்டாயுதபாணி
தேசிகர், யாழ். முறைமாவட்டத்தின் மூத்த குருவும் முன்னாள் ஊரணி மயிலிட்டி
பங்குத்தந்தையும் லண்டன் கத்தோலிக்க ஆண்மீக பணியகத்தின் இயக்குநருமான
அருட்தந்தை தேவராஜன் அடிகள் ஆகியோர் அஞ்சலி உரையை ஆற்றினர்.

தொடக்க உரை

தொடக்க உரையை வல்வெட்டித்துறை முன்னாள் பிரஜைகள் குழு செயலாளர் ந. ஆனந்தராஜ்
ஆற்றினார்.

அதன் பின்னர் அறிக்கை அறிமுகமும் பிரதிகள் வழங்கலையும் தொடர்ந்து சிறப்புரைகளை
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிறிட்டோ பெர்னானடோ மற்றும் வல்வெட்டித்துறை
முன்னாள் பிரஜைகள் குழு தலைவர் ச.செல்வேந்திரா ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

வல்வெட்டித்துறை - ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் : அறிக்கை வெளியீடு | Report Release Held In Jaffna

நன்றி உரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் கு.மகாலிங்கம் நிகழ்தியிருந்தார்.

மேலும், இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக
மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/AeCyexSZDrg

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.