முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிலச்சரிவில் காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச நிபுணத்துவத்தை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

நிலச்சரிவுகளில் புதைக்கப்பட்ட உடல்களை மீட்பதற்கும், டிட்வா சூறாவளி
பேரழிவைத் தொடர்ந்து காணாமல் போனதாக கூறப்படுவோரை கண்காணிப்பதற்கும் சர்வதேச
நிபுணத்துவத்தை பெறுமாறு காணாமல் போனோர் அலுவலகம் அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

அலுவலக ஆணையாளர் மீராக் ரஹீம் இதனை தெரிவித்துள்ளார்.

வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்

இதன்படி நிலச்சரிவுகளுக்கு பிறகு காணாமல்போனவர்களின் உடல்களை மீட்பதில்
நிபுணத்துவம் பெற்ற சர்வதேச குழுக்களின் உதவியை கோருமாறு தமது அலுவலகம்
அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக மிராக் ரஹீம் ஆங்கில செய்தித்தாள்
ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் குடும்பங்கள் இறந்தவர்களுக்கு உரிய கண்ணியத்துடன் இறுதிச் சடங்குகளை
நடத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போனவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களைக் கையாள்வதில்
தமது அனுபவத்தைப் பயன்படுத்தி, டிட்வா சூறாவளி காரணமாக காணாமல் போனவர்களின்
உடல்களை மீட்டெடுப்பதற்கான தேடலுக்கு முன்னுரிமை அளிப்பதன்
முக்கியத்துவத்தையும் தமது அலுவலகம் வலியுறுத்தியுள்ளதாக ரஹீம்
தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களின் உடல்களை மீட்க ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விரைவான குழுவின்
தொடர்ச்சியான மனிதாபிமான முயற்சிகளை ரஹீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலச்சரிவில் காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச நிபுணத்துவத்தை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை | Request Government To Seek International Expertise

இறப்புச் சான்றிதழ் வழங்கும் பணி

இதற்கிடையில், புதிய வர்த்தமானி அறிவிப்பைத் தொடர்ந்து, பேரிடர் பாதிக்கப்பட்ட
பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை
வழங்கும் பணியை பதிவாளர் நாயகம் அலுவலகம் தொடங்கியுள்ளது.

அதன்படி, காணாமல் போனவரின் குடும்பத்தினர், தமது உறவுகள் காணாமல் போனது
குறித்து சம்பந்தப்பட்ட கிராம சேவகரிடம் ஒரு பிரமாணப் பத்திரத்தை
சமர்ப்பிக்கலாம்.
ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், இந்த பிரமாணப் பத்திரம் இரண்டு வாரங்களுக்கு
பொதுவில் காட்சிப்படுத்தப்படும்.

அதன் பிறகு, சம்பந்தப்பட்ட பிராந்திய பதிவாளர் அலுவலகங்கள், பிரதேச செயலாளரின்
பரிந்துரை மற்றும் மரண விசாரணை அதிகாரியின் துணை ஆவணங்களுடன் வரும்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்க
அறிவுறுத்தப்படும்.

இதேவேளை திணைக்கள தகவல்படி, நிலச்சரிவுகளில் காணாமல் போனதாக
அறிவிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை குறைந்தது 126 இறப்புச் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.