வடக்கு மாகாணத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் வவுனியாவும் தாம் சேவையாற்றவேண்டிய ஒரு மாவட்டம் என்பதை உணர்ந்து கடமையாற்ற வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன்(S. Thilakanadan) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்த பாேதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
[CX9SJMJ
]
ஆசிரியர் இடமாற்றம்
“சூடுவெந்தபுலவு பகுதயில் உள்ள பாடசாலையில் தகவல் தொடர்பாடல் பாடம் கற்பித்த
ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆசிரியர் நியமிக்கப்பட்டு 6 மாதம்
கடந்தும் அவர் அங்கு செல்லவில்லை.
இதனால் அந்த மாணவர்களின் கல்வி நிலை
பாதிக்கப்படடுள்ளது.
செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்து நாகரிக
பாடத்திற்கு ஆசிரியர் இல்லை.
ஏன் அந்த வெற்றிடம் நிரப்பபடவில்லை. வவுனியா
தெற்கு வயலயத்தில் 23 கணித ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில்
87 கணித ஆசிரியர்கள் மேலதிகமாகவுள்ளனர். மாகாணத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் வடக்கு மாகாணம் என்றால் யாழ். மாவட்டம் மட்டும் தான் என்றா நினைக்கிறார்கள்.
வவுனியாவும் வடக்கு மாகாணம்
தான். இனிமேல் இவ்வாறான கூட்டங்களுக்கும் மாகாணப் பணிப்பாளர்களையும் அழைக்க
வேண்டும்” என்றார்.