நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் (Chamara Sampath Dassanayake) பிணையை இரத்து செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையே இவ்வாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) இன்று (16.05.2025) நிராகரித்துள்ளார்.
தலைமை நீதவான்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சமர்ப்பிப்புக்கள் பிணையை இரத்து செய்ய போதுமான உண்மைகளை வெளிப்படுத்தாததால், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தலைமை நீதவான் தனுஜா லக்மாலி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கடந்த மாதம் 27ஆம் திகதி மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.