முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீட்பு நடவடிக்கைகளுக்கு 7989 இராணுவ வீரர்கள் தயார்நிலையில்..

மேல் மாகாணத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும், நிவாரண நடவடிக்கைகளுக்காக 7989 இராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

இந்த மீட்புப் பணிகளுக்காக 23 இராணுவ கவச வாகனங்கள், 60 பெபல் வாகனங்கள் மற்றும் 32 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு நடவடிக்கை

தேவையான மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப்படை தற்போது பலாலி, ரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் வீரவில தளங்களில் 07 ஹெலிகொப்டர்களை தயார்படுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளுக்கு 7989 இராணுவ வீரர்கள் தயார்நிலையில்.. | Rescue Operations Inclement Weather Military

மேலும், நாடு முழுவதும் 488 பாதுகாப்பு மையங்களில் உள்ள 43,925 பேருக்கு உணவு மற்றும் ஏனைய தேவையான வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பதுளை, பல்லேகலே, திகன, மருதானை, களனிமுல்ல மற்றும் மட்டக்குளிய ஆகிய இடங்களில் இராணுவம் 08 உணவு தயாரிப்பு தளங்களை நிறுவியுள்ளதுடன் அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு முகாமிலும் இடம்பெயர்ந்தவர்களுக்காக உணவு தயாரிப்பதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

அனர்த்த நிலைமை

மேலும், 2025-11-27 முதல் 2025-11-29 வரை மேற்கொள்ளப்பட்ட விமானப்படை நடவடிக்கைகளில் 71 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், இடம்பெயர்ந்தவர்களுக்கு 2565 கிலோகிராம் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுகளை விமானம் மூலம் அவர்களுக்குத் தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரவித்தார்.

மீட்பு நடவடிக்கைகளுக்கு 7989 இராணுவ வீரர்கள் தயார்நிலையில்.. | Rescue Operations Inclement Weather Military

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரண சேவைகளை வழங்குவதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் 80 பேர் கொண்ட குழுவுடன் இந்திய விமானப்படையின் IL-76 விமானம் இன்று(29) காலை நாட்டை வந்தடைந்துள்ளது.

தற்போது கொழும்பு துறைமுகத்தில் உள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்தின் இரண்டு விமானங்கள் கம்பஹா மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் அனர்த்த நிலைமையைக் கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.