வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(16.10.2025) தள்ளுபடி செய்துள்ளது.
நாகானந்த கொடித்துவக்கு மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்ன ஆகியோரால் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் ஊடக அலுவலகத்தின்படி,
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கு, நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பல உத்தரவுகள் செயன்முறைக்கு உட்படுத்தப்படாததால், வழக்கை முடிவுறுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் தாமதமானது.
ரிட் மனு தள்ளுபடி
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, வழக்கு தொடர்வதற்கான சட்டபூர்வ காரணங்கள் இல்லாமல் ஊடக விளம்பரத்திற்காகவே தொடரப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
மனுதாரர், இந்த வழக்கை தொடரந்து கொண்டு செல்ல தவறியதால், மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த சமர்ப்பிப்புடன் உடன்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.