இலங்கையில் முதலீட்டாளர்கள் முதலீட்டு வாரியத்தில் செய்த முதலீடுகளின் அடிப்படையில் அவர்களுக்கான குடியிருப்பு விசாக்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, திகன மற்றும் நுவரெலியாவை மையப்படுத்தி புதிய இரண்டு தொழிநுட்ப முதலீட்டு வலயத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
முதலீட்டு வலயங்கள்
இதேவேளை, முதலீட்டு வலயங்களுக்கு அண்மித்த சேவைகளுக்காக மேலும் 1000 பில்லின் ரூபாயும் காணி தகவல் உள்ளிட்ட மத்திய டிஜிட்டல் சேவைக்காக 100 மில்லியன் ரூபாயும் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய தனி பொருளாதார மையம் உள்ளிட்ட முதலீடுகளுக்காக 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

